வடமாநிலத்தவர்களை அதிகளவு ஏற்றி வந்த வேனை மடக்கி பிடித்து சுகாதாரத்துறையினர் அபராதம்


வடமாநிலத்தவர்களை அதிகளவு ஏற்றி வந்த வேனை மடக்கி பிடித்து சுகாதாரத்துறையினர் அபராதம்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:34 PM IST (Updated: 9 Jun 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

வடமாநிலத்தவர்களை அதிகளவு ஏற்றி வந்த வேனை மடக்கி பிடித்து சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

நொய்யல்
வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது சேலம் பகுதியில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த வேன் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து சுகாதாரத்துறை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான அதிகாரிகள் அந்த வேனை மடக்கி பிடித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த வேனில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு, சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் இருந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் கீழே இறக்கி 12 பேருக்கும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். பின்னர் கொரோனா பரவல் குறித்து அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Next Story