அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நொய்யல்
நொய்யல் அருகே குந்தாணிபாளையம் நத்தமேட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசையைமுன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல், கரியாம்பட்டி, புன்னம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், அத்திப்பாளையம், பெரியபொன்னாச்சி, சின்ன பொன்னாச்சி அம்மன் கோவில், திருக்காடுதுறை, சேமங்கி மாரியம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story