சோளிங்கர் அருகே; அரசு பள்ளிகளில் ரூ.2¼ லட்சம் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது


சோளிங்கர் அருகே; அரசு பள்ளிகளில் ரூ.2¼ லட்சம் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 11:42 PM IST (Updated: 9 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே 3 அரசு பள்ளிகளில் மடிக்கணிகள், பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி, தகரகுப்பம், குப்பக்கல்மேடு ஆகிய பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 5 மடிக்கணிகள், டி.வி, டேப் ரெக்கார்டர், 2 கேமராக்கள், ஸ்பீக்கர், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனதாக சோளிங்கர் போலீசில் அந்தந்தப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் புகார் செய்தனர். 

இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உத்தவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் கருமாரியம்மன் கூட்டுச்சாலை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனைச் செய்தனர்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் வைத்திருந்த மடிக்கணினி குறித்து போலீசார் கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் இருவரும் ரெண்டாடி அருகில் உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (வயது 23), தேவராஜ் (28) எனத் தெரிய வந்தது.

இருவரும் ரெண்டாடி, தகரகுப்பம், குப்பக்கல்மேடு ஆகிய தொடக்கப்பள்ளிகளில் மேற்கூறிய பொருட்கள், பணத்தைத் திருடியதாகக் கூறினர். 

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பள்ளியில் திருடிய  பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story