கூடலூர் மின்வாரிய அலுவலகம் மூடல்
கூடலூர் மின்வாரிய அலுவலகம் மூடல்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது.
தொடர்ந்து அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினர் அழைத்து சென்றனர். மேலும் மின்வாரிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். பின்னர் அலுவலகம் மூடப்பட்டது. வருகிற 13-ந் தேதி வரை மின் வாரிய அலுவலகம் மூடப்படும், எனவே மின் கட்டணத்தை நுகர்வோர்கள் ஆன்லைனில் செலுத்திக்கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story