கரூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் அம்மா மருந்தகம் திறக்கப்படுமா
கரூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் அம்மா மருந்தகம் திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்
கரூர் ஜவகர் பஜாரில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் அம்மா மருந்தகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதால், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து மருந்து மற்றும் மாத்திரைகள் வாங்கி செல்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் திறந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் மருந்தகம் திறக்கப்படுவதில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமையில் மருந்து, மாத்திரைகள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் அம்மா மருந்தகத்தை ஞாயிற்றுக்கிழமையிலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story