மானாமதுரை,
மானாமதுரை அருகே கலைகூத்தாடி நகர், கங்கை அம்மன் நகரில் சர்க்கஸ் கலைஞர்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் சர்க்கஸ் தொழில் நடத்த முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். இந்த வகையில், சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர் சார்பில் 10 கிலோ அரிசி, முககவசம், காய்கறி தொகுப்புகளை சர்க்கஸ் கலைஞர்கள் 100 பேர் குடும்பங்களுக்கு மானாமதுரை தாசில்தார் தமிழரசன் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை சேர்ந்த மாநில இணைச்செயலாளர் கந்தசாமி, மாவட்ட இணை செயலாளர்கள் யசோதா, கருப்பையா, நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் பட்டாபி நாகராஜ் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்