விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின்  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:42 AM IST (Updated: 10 Jun 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை

கோவை அருகே இக்கரை போளுவாம்பட்டியில் பேட்டரி ஆட்டோ நொய்யல் ஆற்றில் கவிழ்ந்து வள்ளுவர் வீதியை சேர்ந்த பழனி (72), காந்தி காலனியை சேர்ந்த பழனிச்சாமி (56) ஆகிய 2 தூய்மை பணியாளர்கள் இறந்தனர். 

மேலும் செம்மேடு பகுதியை சேர்ந்த 8 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு துறையில் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கையை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோவை கலெக்டரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. 


Next Story