மாவட்ட செய்திகள்

குவித்து வைக்கப்பட்டு இருந்த மணல் பறிமுதல் + "||" + Sand seizure

குவித்து வைக்கப்பட்டு இருந்த மணல் பறிமுதல்

குவித்து வைக்கப்பட்டு இருந்த  மணல் பறிமுதல்
திருச்சுழி அருகே அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே ஊரணிப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கிரசரின் உள்ள அரசு அனுமதியின்றி ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக பொதுமக்களிடமிருந்து திருச்சுழி தாசில்தார் அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி தலைமையிலான வருவாய்த்துறையினர் ஊரணிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரசரின் உள்ளே ஆய்வு செய்ததில் அரசு அனுமதியின்றி சுமார் 10 யூனிட் ஆற்றுமணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாசில்தாரின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட ஆற்றுமணல் லாரி மூலம் திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.