மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 1:02 AM IST (Updated: 10 Jun 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருேக மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் ரெயில்வே கேட் அருகில் வைத்து வெளி மாநில மதுபாட்டில் விற்ற சிவகாசியை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் (வயது27) என்பவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைய்யது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்த போது படந்தால் வீட்டின் பின்புறம் வைத்து மதுபாட்டில் விற்ற சரவணன் (20) என்பவரிடம் 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story