மாவட்ட செய்திகள்

சேரன்மாதேவியில் மரக்கிளை திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு + "||" + In Cheranmadevi, a tree branch suddenly broke and fell on the road

சேரன்மாதேவியில் மரக்கிளை திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு

சேரன்மாதேவியில் மரக்கிளை திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு
சேரன்மாதேவியில் மரக்கிளை திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மாதேவி, ஜூன்:
சேரன்மாதேவி - நெல்லை டவுன் சாலையில், கன்னடியன் கால்வாய் பாலம் அருகே, தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கிக்கு முன்பாக மிகப் பழமையான மருதமரம் ஒன்று இருந்தது. நேற்று திடீரென மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக சேரன்மாதேவி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை மரம் அறுக்கும் எந்திரம் மூலமாக வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.