சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது


சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 1:22 AM IST (Updated: 10 Jun 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, ஜூன்:
நெல்லை சிவந்திபட்டியை சேர்ந்தவர்கள் ராஜா என்ற மணக்கரை ராஜா (வயது 58), பரமசிவம் என்ற கட்டை பரமசிவம் (37), பரமசிவம் (42). இவர்கள் 3 பேரும் சிவந்திப்பட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் வழியில் உள்ள ராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, சாராய ஊறலை அழித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story