தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்
திருக்கருகாவூர் அருகே நாகலூரில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மெலட்டூர்;
திருக்கருகாவூர் அருகே நாகலூரில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தொடர் மழை
திருக்கருகாவூர் அருகே கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தொடர் மழை காரணமாக வயலிலே சாய்ந்து வீணாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருக்கருகாவூர் அருகே உள்ள நாகலூர் பகுதியில் கோடை பருவத்தில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் அறுவடைக்கு முன்பே நெற்பயிர்கள் அழுகி வீணாகக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நஷ்ட ஈடு
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கி அழுகிவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story