மது விற்ற 2 பேர் கைது
கடையநல்லூரில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர், ஜூன்:
கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரம் கிராமத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து விற்கப்படுவதாக சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கருத்தப்பாண்டி (வயது 48), செல்வகுமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், மதுபாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story