மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 293 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 10 பேர் பலி + "||" + corona died

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 293 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 10 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 293 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 10 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண், 63, 75 வயது முதியவர்கள், 52 வயது பெண், 65 வயது முதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதேபோல் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண், 68 வயது முதியவர் மற்றும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த 33 வயது ஆண், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர், வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணை 246 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 36 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 616 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 32ஆயிரத்து 854 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 941 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ெகாரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்.
2. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி மேலும் 613 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர்
4. திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்
5. சேலம் மாவட்டத்தில் புதிதாக 547 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 10 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 547 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.