மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தாமரைக்குளம்
கொரோனா 2-வது அலை தடுப்பு பணியில் அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார்.  நகராட்சி துப்புரவு பணியாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதை போல் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் துப்புரவு தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அதற்கான சிகிச்சை தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கோவையில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
4. ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
5. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.