மாம்பழம் பறித்த சிறுவர்களை மரத்தில் கட்டி வைத்த 2 பேர் கைது
ஜல்காவ் அன்ஜன்விகிரே கிராமத்தில், மாம்பழம் பறித்த சிறுவர்களை மரத்தில் கட்டி வைத்த 2 பேரை கைது செய்தனர்.
ஜல்காவ்,
ஜல்காவ் அன்ஜன்விகிரே கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து விவேக் பாட்டீல் என்பவரின் விளைநிலத்தில் இருந்த மரத்தில் மாம்பழத்தை பறித்து உள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த பிரவின் என்பவர் இதனை கண்டு விவேக் பாட்டீலுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதன்படி 2 பேரையும் பிடித்து மரத்தில் கயிற்றினால் கட்டி உள்ளார். இதன்பின்னர் 2 மணி நேரம் கழித்து 2 பேரையும் விடுவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோவை விவேக் பாட்டீல் சமூக வலைத்தளத்தில் பரப்பி விட்டார். இது பற்றி அறிந்த போலீசார் பிடிபட்டவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாதி தொடர்பான விவகாரம் என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் பண்ணை வீட்டின் உரிமையாளர் விவேக் பாட்டீல் மற்றும் பிரவின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story