ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு செல்ல தேவையில்லை ஆன்லைனில் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறும் வசதி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்
ஆன்லைனில் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறும் வசதியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்க உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் எல்.எல்.ஆர். என்ற வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று தான் பெற முடியும். விரைவில் அதை வீட்டில் இருந்தபடியே பெற முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை மராட்டிய போக்குவரத்து துறை துணை கமிஷனர் அவினாஸ் தகானே தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
இதன்படி ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுனர் பயிற்சி உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுதி பெற்றுக்கொள்ள முடியும். இது விண்ணப்பந்தாரர்களின் அலைச்சலை குறைக்கும். சட்டவிரோத முகவர்களை தடுக்கும். ஊழலையும் குறைக்கும். இது பொதுமக்களின் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இதேபோல ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் வேலைப்பளுவும் குறைகிறது.
இந்த வசதியை அடுத்து 2 அல்லது 3 நாட்களில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுதோறும் மராட்டிய போக்குவரத்து துறை சுமார் 20 லட்சம் ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story