தூசி அருகே, மணல் கடத்திய 4 பேர் கைது -2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


தூசி அருகே, மணல் கடத்திய 4 பேர் கைது -2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2021 4:27 PM IST (Updated: 10 Jun 2021 4:27 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து மணலுடன் 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தூசி,

வெம்பாக்கம் தாலுகா உக்கல்கிராம பகுதியில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 மோட்டார்சைக்கிளில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் 4 பேரும் மோட்டார்சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து மோட்டார்சைக்கிள்களை சோதனையிட்டபோது மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து மணலுடன் 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story