சேத்துப்பட்டு மருத்துவமனையை விரிவுபடுத்த கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்கள் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆய்வு
சேத்துப்பட்டு மருத்துவமனையை விரிவுபடுத்த கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்களை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனை ரூ.1 கோடிேய 30 லட்சத்தில் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆனால் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடங்கள் போதுமானதாக இல்லாததால் சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான செஞ்சி சாலையில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த இடத்தை போளூர் தொகுதி அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் வந்தவாசி சாலையில் சக்கர பிள்ளையார்கோவில் அருகே அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் பூங்காவனம், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ஹரிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்ட பிரபு, வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜன் ஆகிேயாருடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆலோசனை செய்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க.நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story