வாலாஜாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 15 கடைகளுக்கு அபராதம்


வாலாஜாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 15 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:50 PM GMT (Updated: 10 Jun 2021 12:50 PM GMT)

வாலாஜாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 15 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து, அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

வாலாஜா,

கொரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரிகள் பலர் தங்களின் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வதாக வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாருக்கு புகார்கள் வந்தது.

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் பொறியாளர் நடராஜன், துப்புரவு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், களப் பணி உதவியாளர் மகேந்திரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விநாயகம், ஆறுமுகம், தாவூத் ஆகியோர் நேற்று வாலாஜா நகரில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்து, வியாபாரம் செய்து கொண்டிருந்த 15 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

Next Story