கும்பகோணத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 44 பேருக்கு கொரோனா
கும்பகோணத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 44 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கும்பகோணம்,
கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கும்பகோணம் பகுதியில் உள்ள 5 ஊராட்சிகளில் மொத்தம் 471 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தனிப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கும்பகோணம் பகுதியில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 104 பேர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். மற்றவர்கள் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story