மாவட்ட செய்திகள்

குழாய் உடைந்து வீணாகிய குடிநீர் + "||" + Drinking water wasted when the pipe breaks

குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்

குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றது.
தேனி 

தேனி மாவட்டம்  கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 21 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன் பாலம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. 

குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மிகவும் வேதனைப்பட்டனர். 

மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து கூடலூர் நகராட்சி நிர்வாகத்துக்கும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். 

ஆனால் நேற்று காலை வரை ஊழியர்கள் யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் பல லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது. 

எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.