பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்


பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்
x
தினத்தந்தி 10 Jun 2021 8:03 PM IST (Updated: 10 Jun 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பரமக்குடி, 
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு நாடார் தெருவில் தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வடக்கு நகர் கழக பொறுப்பாளர் ஜீவரெத்தினம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிரமுகர் சங்கரன் முன்னிலை வகித்தார். இலக்கிய அணி செயலாளர் நவசக்தி வரவேற்றார். முருகேசன் எம்.எல்.ஏ. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நலிந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் முட்டைகளை வழங்கினார். இதில் பொறுப்புக் குழு உறுப்பினர் பைசல் ரசீது, போகலூர் கூட்டுறவு சங்க இயக்குனர் ராமச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் வக்கீல் பரமசிவன், மற்றும் நிர்வாகிகள் திருப்பதி, சிவா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story