எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி மற்றும் நரிப்பையூர் பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் இஸ்ஹாக், நூருல்அமீன், தொகுதி தலைவர் ராஜாமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொகுதிச் செயலாளர் முகம்மது ஆரிப் உள்ளிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story