வியாபாரிகள் கடைகளை திறந்ததால் பரபரப்பு


வியாபாரிகள் கடைகளை திறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 8:14 PM IST (Updated: 10 Jun 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதியில் சாலையோர கடைகளை வியாபாரிகள் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்: 

கம்பம் அருகே சுற்றுலா தலமான சுருளி அருவி உள்ளது. ஊரடங்கைெயாட்டி சுற்றுலா தலங்களில் கடைகள் திறக்க அனுமதி இல்லை. 

இதையடுத்து அருவி பகுதியில் உள்ள சாலையோர கடைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டிருந்தன.  

இந்த நிலையில் சுருளி அருவி பகுதியில் சாலையோர ஓட்டல்கள், டீக்கடைகளை வியாபாரிகள் திறந்தனர். ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் வந்தது.

 இதையடுத்து கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், தண்டபாணி, ஊராட்சி தலைவர் மொக்கப்பன் ஆகியோர் சுருளி அருவி பகுதிக்கு நேற்று சென்றனர். 

அங்கு திறந்திருந்த கடைகளை மூடும்படி ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

மேலும் தடையை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். 

உடனே வியாபாரிகள் கடைகளை மூடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story