பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2021 8:23 PM IST (Updated: 10 Jun 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி: 

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முனியாண்டி மனைவி நித்யா (வயது 30). 

இவர், தேனி சிவாஜி நகரில் செயல்பட்ட ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்தார். பின்னர் அங்கு வேலை பிடிக்காததால் வேலையில் இருந்து நின்று கொள்வதாக கூறியுள்ளார். 

அப்போது அதன் உரிமையாளர்களான தேனியை சேர்ந்த ராஜாமுகமது, பிரதிபா ஆகியோர் நித்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் நித்யா புகார் செய்தார்.

 அதன்பேரில், ராஜாமுகமது, பிரதிபா ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாஹியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story