கொரோனா பரவல் குறைந்ததால் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.


கொரோனா பரவல் குறைந்ததால் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.
x
தினத்தந்தி 10 Jun 2021 3:03 PM GMT (Updated: 10 Jun 2021 3:03 PM GMT)

கொரோனா பரவல் குறைந்ததால் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டம்:
கொரோனா பரவல் குறைந்ததால் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.
அகழாய்வு பணிகள்
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. தொடர்ந்து ஏரல் அருகே கொற்கையிலும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.
ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.  கொற்கையில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்பும், சங்கு அறுக்கும் தொழிற்சாலையும் மற்றும் ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டறியப்பட்டது.
மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததின் காரணமாக, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின. அங்கு தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களிலும் பள்ளங்களை தோண்டி, அகழாய்வு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத்துக்குள்...
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் அகழாய்வு பணிகளை நிறைவு செய்யும் வகையில், பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம்’ என்று தெரிவித்தனர்.
இதுெதாடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விைரந்து தொடங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால ெபாருட்கள் கண்டறியப்பட்ட கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட 37 இடங்களிலும் அகழாய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Next Story