அடிக்கடி மின் தடையால் நோயாளிகள் அவதி


அடிக்கடி மின் தடையால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 10 Jun 2021 8:38 PM IST (Updated: 10 Jun 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி மின் தடையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கீழக்கரை, 
கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக கீழக்கரை நகர் புறத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி அறிவிப்பில்லாத மின்தடை ஏற்படுவதால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் இருந்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை மூலம் அவர்களுக்கு ஆக்சிஜன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் சிகிச்சை பெற்று வருகின் றனர். இந்தநிலையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளி களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story