மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ,கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + in thoothukudi, sdbi caders demonstration

தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ,கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ,கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திரேஸ்புரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திரேஸ்புரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மைதீன் கனி தலைமை தாங்கினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அன்றாட செலவுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும், காரணமாகும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதுபோல் முத்தையாபுரம் பகுதியில் தொகுதி துனைத்தலைவா் மாமு நைனா தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் பதாகைகள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.