மாவட்ட செய்திகள்

வெறையூர் சுற்று வட்டார பகுதியில் கோவக்காய் பயிரிடும் விவசாயிகள்.சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் வழங்க கோரிக்கை. + "||" + Farmers cultivating courgettes

வெறையூர் சுற்று வட்டார பகுதியில் கோவக்காய் பயிரிடும் விவசாயிகள்.சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் வழங்க கோரிக்கை.

வெறையூர் சுற்று வட்டார பகுதியில் கோவக்காய் பயிரிடும் விவசாயிகள்.சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் வழங்க கோரிக்கை.
வெறையூர் சுற்று வட்டார பகுதியில் கோவக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாணாபுரம்

கோவக்காய் கொடி

வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாகும். பெரும்பாலான விவசாயிகள் ஆண்டு பயிராக கரும்பு, மரவள்ளி, மஞ்சள் ஆகியவற்றையும், பருவ கால பயிராக நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து ஆகியவற்றையும் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, காய்கறி பயிர்களை ஒருசில விவசாயிகள் மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். அந்தப் பயிருக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிவகைகளை செய்து வரும் விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைக்கு அதிகளவில் மாறி வருகின்றனர். 

வெறையூர் மற்றும் வலசை ஆகிய சுற்று வட்டாரப் பகுதியில் கோவக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவக்காய் பயிருக்கு பந்தல் அமைத்து, கோவக்காய் கொடியை பந்தல் மீது ஏற்றி விடுவது, தொடர்ந்து களை எடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதால் இந்தப் பயிருக்கு பராமரிப்பு பணி அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மானியம் வழங்க நடவடிக்கை

வெறையூர் மற்றும் வலசை பகுதியில் பயிரிடப்படும் கோவக்காய் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோவக்காய் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டும் இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன முறைகள் அதிகளவில் கிடைக்கவில்லை, எனத் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் சொட்டுநீர் பாசன முறையில் பயிரிடப்படும் காய்கறி பயிர்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.