அரக்கோணம் டவுன், மகளிர் காவல் நிலையங்களில்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு

அரக்கோணம் டவுன், மகளிர் காவல் நிலையங்களில்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2021 10:52 PM IST (Updated: 10 Jun 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் டவுன், மகளிர் காவல் நிலையங்களில்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேற்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கோணம், சென்னையின் புறநகர் பகுதியாக இருப்பதால் சமூக விரோதிகள் பலர் அரக்கோணத்தில் மறைந்திருந்து குற்றச் செயல்களில் ஈடுபட கூடும். அவ்வாறு ஈடுபவர்கள் மீது அவர்களின் பழைய வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

ஆய்வின்போது அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், புனிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story