5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது
கரூர்
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுசார்பில் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் ராமச்சந்திரன், ரங்கசாமி மற்றும் அவரது நண்பர்கள் வழங்கிய நிதி உதவியுடன் சேர்த்து மொத்தம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டன. பின்னர் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் இயங்கி வரும் தோகைமலை, பஞ்சப்பட்டி, வெள்ளியணை, சின்னதாராபுரம் மற்றும் வாங்கல் ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தலா ஒன்று வீதம் வழங்குவதற்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story