காரைக்குடி,
காரைக்குடி, நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் டாக்டர் கார்த்திகேயன், சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், ரவி சங்கர், சுந்தர், பிருந்தா ஆகியோர் காரைக்குடி கண்ணன் பஜார் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரெடிமேட் ஷோரூம், பர்னிச்சர் கடை, பேன்சி ஸ்டோர் ஆகிய கடைகள் ஊரடங்கு விதிமுறை மீறி இயங்கியது தெரியவந்தது, உடனடியாக அதிகாரிகள் அந்த கடைகளை பூட்டினர். ரெடிமேட் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு ரூ.1000 அபராதமும் விதித்தனர். பேன்சி ஸ்டோரில் கூட்டம் அதிகம் இருந்ததால் அங்கு இருந்த 10 பேரையும் கொரோனா தொற்று உள்ளதா? என கண்டறியும் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.