மாவட்ட செய்திகள்

எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் + "||" + To conduct online classes for students without any hassles

எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்

எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தினார்.
திருவாரூர்,

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்துவதுடன், மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளிகளின் தாளாளர், தலைமையாசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் உரிய அறிவுரை வழங்கினார்.


அப்போது அவர் கூறியதாவது:-

எந்தவித இடர்பாடுகள் இன்றி

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வழி கல்வி முறையாக நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள்-மாணவ, மாணவிகள் நேரடி தொடர்பில் கல்வி கற்பதால் உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றிட வேண்டும். இந்த ஆன்லைன் வகுப்புகளை பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் கண்காணித்திட வேண்டும். எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 11 பள்ளிகளை சேர்ந்த தாளாளர், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? டாக்டர்களுக்கு அறிவுரை
கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி டாக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
2. திருமணம் என்பது புனிதமானது: கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் ஐகோர்ட்டு அறிவுரை
திருமணம் என்பது புனிதமானது. கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.
3. சாலையில் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கி பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை
சாலையில் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கி பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை.
4. மாணவிகளிடம் ஆன்லைனில் சில்மிஷம்: ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
5. சென்னை மாநகராட்சி மயானங்களில், இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி; ககன்தீப் சிங் பேடி தகவல்
மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதிகளை செய்து வருவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.