நெகமம் எம்.ஜி.ஆர். நகர் தனிமைப்படுத்தப்பட்டது


நெகமம் எம்.ஜி.ஆர். நகர் தனிமைப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 10 Jun 2021 6:03 PM GMT (Updated: 10 Jun 2021 6:03 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக நெகமம் எம்.ஜி.ஆர். நகர் தனிமைப்படுத்தப்பட்டது.

நெகமம்

நெகமம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெகமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மேலும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக எம்.ஜி.ஆர். நகர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி சார்பில் அந்த பகுதி தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது என்றும், வெளியாட்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 

அந்த பகுதியில் அதிகாரிகள், மருத்துவ குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பிளிச்சீங் பவுடர் தூவுதல், கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Next Story