மாவட்ட செய்திகள்

ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 103 பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona test for 103 people in J Krishnapuram panchayat

ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 103 பேருக்கு கொரோனா பரிசோதனை

ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில்  103 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 103 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சுல்தான்பேட்டை 

சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ஏ.டி.காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று ஜே.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் சந்தோஷ் லேனா, சுகாதாரத்துறை அதிகாரிகள் முருதாஸ், ரவிச்சந்திரன் மற்றும் நர்சுகள் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். இதில் மொத்தம் 103 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.