இருதரப்பினர் மோதல்; 3 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:46 PM IST (Updated: 10 Jun 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே இருதரப்பினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள தெண்ணீர்வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணபதி (வயது 39).அதே கிராமத்தை சேர்ந்தவர் சொர்ணலிங்கம் (54). சொர்ணலிங்கம் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வாய்க்கால் வெட்டினார். அப்போது ஜெயகணபதியின் தோட்டம் அருகே உள்ள கற்களை பொக்லைன் எந்திரத்தால் உடைத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜெய கணபதி, சொர்ணலிங்கம் வீட்டிற்குச் சென்று கல்லை உடைத்து ஒரு ஆண்டு ஆகிறது, அதை சரி செய்து தருகிறேன் என்று கூறினீர்கள். எப்போதுதான் சரி செய்து தருவீர்கள் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சொர்ணலிங்கம் ஜெயகணபதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து ஜெயகணபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் சொர்ணலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயகணபதியும் அதே கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரும் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கியதாக சொர்ணலிங்கம் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரிலும் ஜெயகணபதி, குமரேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story