மாவட்ட செய்திகள்

மேலும் 897 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 897 பேருக்கு கொரோனா

மேலும் 897 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியாகினர்.
897 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதுபோல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் வருகிறது. இதனால் தொடர்ந்து சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று தமிழகத்தில் 16 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
12 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 72 ஆயிரத்து 37-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,770 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 940-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 485 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் நேற்று பலியாகினர். பலி எண்ணிக்கை தற்போது 612-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.