மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 8 பேர் பலி + "||" + 8 killed for corona

கொரோனாவுக்கு 8 பேர் பலி

கொரோனாவுக்கு 8 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். மேலும் தொற்று பாதிப்பு 24 ஆயிரத்தை கடந்தது.
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23 ஆயிரத்து 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்து 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 161 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண், 62 வயது பெண், 56 வயது பெண், 85 வயது மூதாட்டி, 67 வயது ஆண், 65 வயது ஆண், 83 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

276 பேருக்கு தொற்று

 அதேபோல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161-ல் இருந்து 169 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 1400 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2. பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதல்; இன்ஸ்பெக்டர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
3. மரத்தில் ஆம்புலன்ஸ் மோதல்; கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர். பிரசவத்துக்கு சென்ற போது நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. மின்சாரம் பாய்ந்து பெட்டிக்கடைக்காரர் பலி
லாலாபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெட்டிக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
5. 107 பேருக்கு கொரோனா; 3 பெண்கள் பலி
107 பேருக்கு கொரோனா; 3 பெண்கள் பலி