மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார் + "||" + Welfare assistance to the poor; Wisdom MP Presented by

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்
ஆலங்குளத்தில் தி.மு.க. சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்.
ஆலங்குளம்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் ஆலங்குளம் புதிய பஸ்நிலையத்தில் ஏழை, எளிய பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் என 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் முன்னிலை வகித்தார். ஞானதிரவியம் எம்.பி. கலந்து ெகாண்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். இதில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, மாரி வண்ணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.