குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்தது
திருக்கருகாவூர் அருகே குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
மெலட்டூர்:
திருக்கருகாவூர் அருகே குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
3 பேர் காயம்
பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அருகே உள்ள கரம்பத்தூர் பகுதியில் நேற்று அதிகாலை கரூரில் இருந்து எம்சாண்டு(மணல்) ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பாபநாசம் நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை கரூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்தார். இரும்புதலை கிராமம் கரம்பத்தூர் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுமன், சேகர், குமார் ஆகியோரது குடிசை வீடுகளில் புகுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குமார் (வயது35), கோகிலா (32), கோகுல்நாத் (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 3 பேரையும் அருகில் இருந்த கிராமத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
தகவல் அறிந்த மெலட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்ததாகவும், லாரி வீடுகளுக்குள் புகுந்ததால் சுமன், சேகர், குமார் ஆகியோரது குடிசை வீடுகள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி. உள்பட தளவாட பொருட்கள் சேதமடைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story