மாவட்ட செய்திகள்

ஆடு திருடிய வாலிபர் கைது + "||" + Arrested

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது
அருப்புக்கோட்டையில் ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 46). இவருடைய 15 ஆட்டுக்குட்டிகளை மர்மநபர்கள் திருடி ெசன்றதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அப்போது பாலவனத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழுக்கலொட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி (28) என்பதும், அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் மகன் சதீஷ்குமார் (27) என்பவருடன் சேர்ந்து ஆட்டுக்குட்டிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தங்கமணியை கைது செய்த போலீசார் அவர் வீட்டில் இருந்த 13 ஆட்டுக்குட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாராயம் வைத்திருந்தவர் கைது
விருதுநகரில் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. மது விற்றவர் கைது
சிவகாசியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
3. ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது
ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது
சாராய ஊறல் போட்டுவிட்டு தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
5. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.