மாவட்ட செய்திகள்

பாண்டமங்கலம், வெங்கரை பகுதியில்ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு 'சீல்' + "||" + 4 shops sealed

பாண்டமங்கலம், வெங்கரை பகுதியில்ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு 'சீல்'

பாண்டமங்கலம், வெங்கரை பகுதியில்ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு 'சீல்'
பாண்டமங்கலம், வெங்கரை பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு 'சீல்'
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் மற்றும் வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி மொபைல், ஜெராக்ஸ், மற்றும் பேக்கரி கடைகள் செயல்பட்டு வருவதாக பரமத்திவேலுார் போலீசாருக்கும், வெங்கரை மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கும் தகவல் கிடைத்தது.  அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பாண்டமங்கலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஒரு மொபைல் மற்றும் ஒரு பேக்கரிக்கு சீல் வைத்தததுடன், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
இதேபோல் வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு மொபைல் மற்றும் ஒரு ஜெராக்ஸ் கடைக்கு‌ பரமத்திவேலூர் போலீசார் மற்றும் வெங்கரை‌ பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாராணி ஆகியோர் சீல் வைத்து தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவசியமின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
========