மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பிளஸ்-2 மாணவர் பலி + "||" + Hit by express train Plus-2 student killed

எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பிளஸ்-2 மாணவர் பலி

எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பிளஸ்-2 மாணவர் பலி
செங்கல்பட்டு மாவட்டம், எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்து கிடப்பது தெரிந்தது.
ஆலந்தூர், 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி யமுனை நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் சாய் கிருஷ்ணன் (வயது 17). இவர், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சாய் கிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சாய்கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து கிடப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.