பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூர்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story