மனைவியை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு அடி-உதை


மனைவியை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 11 Jun 2021 10:28 AM IST (Updated: 11 Jun 2021 10:28 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு அடி-உதை

திரு.வி.க. நகர்,

சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர், புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 2 பேர் சுரேசை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயம் அடைந்த அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மதன்குமார் (27), காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சந்துரு (24) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சுரேஷ் வேலை செய்துவரும் புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் கைதான மதன்குமாரின் மனைவி சந்தியா வேலை செய்து வருகிறார். தனது மனைவி சந்தியாவை சுரேஷ் ஆபாசமாக பேசி திட்டியதால் ஆத்திரம் அடைந்த மதன்குமார், தனது மைத்துனர் சந்துருவுடன் சேர்ந்து சுரேசை தாக்கியது தெரிந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story