மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + At the Chennai airport Rs 63 lakh gold seized

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த சாமினோ ஜேசையோ (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் பெல்ட் போடும் பகுதியில் ரகசிய அறை வைத்து அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அவரிடம் இருந்து ரூ.63 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாமினோ ஜேசையாவை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.89 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வீடுகளை சுத்தம் செய்யும் கருவிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது பயங்கரவாத பயிற்சி பெற்றவரா? அதிகாரிகள் விசாரணை
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று வந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏமனில் பயங்கரவாத பயிற்சி பெற்றாரா? என அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
5. சென்னை விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.