நாகையில் குளத்தின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு - அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகையில் குளத்தின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம் சிவன் தெற்கு வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கோவில் குளத்தின் தென்கரை பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை நகராட்சியினர் முறையாக அப்புறப்படுத்தாததால், அதிகளவு தேங்கி குப்பை கிடங்கு போல் காட்சி அளிக்கிறது. மேலும் குளத்துக்குள் குப்பைகள் விழுவதால், குளத்து நீர் மாசுபடுகிறது. குப்பைகளில் கிடக்கும் கழிவு பொருட்களை சாப்பிட வரும் நாய்கள் கிளறி விடுவதாலும், காற்றில் பறப்பதாலும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
குப்பைகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குளத்தின் கரைேயாரத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story