3 ஆண்டுகள் புதுப்பிக்க தவறியவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு செய்ய சிறப்பு சலுகை - கலெக்டர் பிரவீன் நாயர் தகவல்
3 ஆண்டுகள் புதுப்பிக்க தவறியவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு செய்ய சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம்,
2017, 2018 மற்றும் 2019 ஆகிய 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story