ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்திய 2பேர் கைது
ரெயிலில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் போலீசார் மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் ெரயிலில் கோவில் பட்டியில் இறங்கிய பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். இதில், கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம் பட்டி நடுத்தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மணிகண்டன் (வயது 32) மற்றும் வாசுதேவ நல்லூர் பழைய ரஸ்தா தெருவைச் சேர்ந்த மீரா மைதீன் மகன் பீர்முகம்மது (வயது 54) ஆகியோரின் பைகளில் 37 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story